நீங்கள் தான் உங்கள் டாக்டர்!
வெள்ளி, ஜனவரி 30, 2015
சனி, ஜனவரி 24, 2015
ரத சப்தமி என்றால் என்ன? அன்று குளிப்பது எப்படி?
சூரிய பகவானுக்கு ப்ரத்யக்ஷ நாராயணன் என்று பெயர். சூரிய பகவான், காஷ்யப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர். தை மாதத்தில் சுக்ல பக்ஷ சப்தமி திதி இவரது பிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியனின் ரதம் வடகிழக்கில் திரும்புகிறது. சூரிய உபாசனை செய்பவர்கள், காயத்ரி மந்திரம் உபதேசம் பெற்றவர்கள் இந்த நாளின் பெருமையை பிறருக்கு சொல்ல கடமைப் பட்டவர்கள்.
சூரியன் இல்லாமல் நாம் இல்லை. சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருகிறார் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். தொலைநோக்கி இல்லாமல் தொலைநோக்கு பார்வை பெற்றவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் நமக்காக சொல்லி வைத்த விஷயங்கள் மிக மிக அற்புதமானவை. சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர்கள் ஏழு வண்ணம் கொண்டது. இந்த ஏழு வண்ணங்களை ஏழு குதிரைகள் என்றும் கொள்ளலாம். அதைப்போலவே வாரத்தின் துவக்கம் சூரியனின் நாளான ஞாயிற்று கிழமை தான். இந்த ஏழு நாட்களையும் ஏழு குதிரைகளாக கொள்ளலாம். சூரியனின் ரதத்தில் பன்னிரண்டு சக்கரங்கள் உள்ளன. இந்த பன்னிரண்டு சக்கரங்களும் பன்னிரண்டு மாதத்தை / ராசியை குறிக்கிறது.
காயத்ரி மந்திரத்தில் வரும் "சவிதுர்" என்ற வார்த்தை சூரியனை குறிப்பதாகும். சூரியன் இந்த நாளில், இந்த நேரத்தில், இந்த திசையில் ரதத்தை திருப்புகிறார் என்பதை துல்லியமாக கணித்து கூறியவர்கள் நம் முன்னோர்கள். இந்த நாளுக்கு ரத சப்தமி என்று பெயர். சப்தமி என்றால் ஏழு என்று பொருள். இங்கு சப்தமி என்பது ஏழாம் நாள் எனப்படும். இந்த ரதசப்தமி நாள் புண்ணிய தினமாக கருதப்படுகிறது. அதனால் தான் பீஷ்மர், ரத சப்தமி வரும் வரை காத்திருந்து முக்தி அடைந்தார். ரதசப்தமி அன்று அருணோதயத்தில் ஸ்நானம் செய்ய வேண்டு என நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். 2015 ம் வருடம் ரதசப்தமி ஜனவரி மாதம் 26 ம் தேதி, திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்று காலை சூரிய உதயம் என்பது காலை 5.30 முதல் 07.15 வரை ஆகும். எனவே இந்த நேரத்தில் குளிக்க வேண்டும்.
ரதசப்தமி ஸ்நானம் செய்வது எப்படி?
ஏழு எருக்க இலையை எடுத்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அக்ஷதையும் (அரிசி) பெண்களாக இருந்தால் அரிசியோடு மஞ்சள் பொடியும் கலந்து அந்த அரிசியை இலையில் வைத்து தலைமேல் வைக்க வேண்டும். அடுத்த இரண்டு இலைகளை இதை போலவே இரண்டு தோள்களிலும் அடுத்த இரண்டு இலைகளை கால் முட்டிகளிலும் அடுத்த இரண்டு இலைகளை பாதங்களிலும் வைக்க வேண்டும். குளிக்கும் இடத்தில் ஒரு நாற்காலி போட்டு கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டால், இதைப்போல இலைகளை வைக்க சௌகரியமாக இருக்கும். இப்போது சூரியாய நமஹ: ரவியே நமஹ: மித்ராய நமஹ: என்று சொல்லி தலையில் தண்ணீர் விட்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
எருக்க இல்லை சூரியனுக்கும், விநாயகருக்கும் உகந்தது. அதனால் தான் எருக்க பிள்ளையார் விசேஷமானது என்று கருதுகிறோம். இந்த எருக்கு இலை பல நோய்களை, தரித்திரத்தை, பாபத்தை போக்க கூடியது. ரதசப்தமிக்கு ஆரோக்கிய சப்தமி என்று ஒரு பெயர் உண்டு. இந்த மாதம் 26ம் தேதி மேற்சொன்னபடி ரதசப்தமி ஸ்நானம் செய்து ஆரோக்கியமாக வாழுங்கள். தர்ப்பணம் செய்பவர்கள் அன்றைய தினம் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பீஷ்மர் பிரம்மச்சாரி என்பதால் அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
வியாழன், ஏப்ரல் 14, 2011
மழை நீர் உயிர் நீர்...
![]() |
ஆம்! இது உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவே ...! ஆசையாய் வீட்டில் வளர்க்கும் தொட்டி செடிக்கு தினமும் நாம் தண்ணீர் ஊற்றுகிறோம். அவற்றின் செழுமையும் பசுமையும் சில மணி நேர மழைக்கு பின்பு அதிகமாகவே உள்ளது. தினமும் நாம் ஊற்றும் நீரில் தராததை மழை தந்துள்ளது. பிற உயிரிணங்கள் மழையில் நனைந்தாலும் அவற்றிக்கு தீ்ங்கொன்றும் இல்லை ஆனால் மனிதர்களுக்கோ மழையில் நனைந்தாலே தீங்கேன்...?
இயற்கை மனிதர்களுக்கு மட்டும் எதிரானதா என்ன?
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



